கோலாலம்பூர் , ஜூன் 13-அரச மலேசிய போலீஸ் படை கூட்டுறவு கழகத்தின்(கேபிடிஆர்எம்) கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கான கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறினார்.
எனினும், நிறுவன கடன்களுக்குச் சலுகை வழங்கலாம் என்று அன்வார் சொன்னார்.
நட்டத்தை எதிர்நோக்கும் நிறுவனங்களின் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போலீஸ் படை தேசிய தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் முன் வைத்த கோரிக்கைக்கு பிரதமர் இவ்விதம் கருத்துரைத்தார்.
கேபிடிஆர்எம்மின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இத்துறையினரின் அடைவு நிலை மற்றும் நடப்பு நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கருத்திற் கொண்டே தள்ளுபடி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் பிரதமர் .


