Homeசமூகம்சமூகம்அக்.1முதல் கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு சாதனம்! அந்தோணி லோக்

அக்.1முதல் கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு சாதனம்! அந்தோணி லோக்

கோலாலம்பூர், ஜூன் 13-

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு சாதனம் (எஸ்எல்டி) பொருத்தப்படுவது கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) வாயிலாக அமல்படுத்தப்படும் இந்த நடைமுறை கனரக வாகனங்களை உட்படுத்தும் மரண சம்பவங்களைக் குறைப்பதோடு சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சொன்னார்.

இதன் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா மற்றும் விரைவு பேருந்துகள், 3,500 கிலோகிராம் எடைக்கு அதிகமான பொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் ஆகியவை வேகக் கட்டுப்பாட்டு சாதனத்தை அவசியம் பொருத்த வேண்டும் என்றார்.

அதே சமயம், ஈராண்டுகளுக்கு ஒரு முறை இந்த வேகக் கட்டுப்பாட்டு சாதனம் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதையும் இவர்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

தவிர, சோதனை விவர அறிக்கையை வாகன உற்பத்தியாளர், போக்குவரத்து துறையால் (ஜேபிஜே) அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப சேவை நிறுவனம், அங்கீகரித்த சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஆகியோரிடம் சமர்ப்பித்து ஒப்புதலையும் பெற வேண்டும்.

இந்தச் சான்றிதழை வாகனமோட்டிகள் எப்போதும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போது இது தேவைப்படும் என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

 

spot_img

latest articles

explore more