Homeசமூகம்மலேசிய ஊடக மன்றத்தில் முத்தமிழ்மன்னன்

மலேசிய ஊடக மன்றத்தில் முத்தமிழ்மன்னன்

கோலாலம்பூர், ஜூன் 14-

இன்று நடைபெற்ற 2025 தேசிய ஊடகவியாளர்கள் தின (HAWANA) கொண்டாட்டத்தின் ஊடே, மலேசிய ஊடக மன்றச் சட்டம் அமலுக்கு வந்தது.

அதனை அறிவித்த தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்ஸில், இந்நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவுவதில், அம்மன்றம் மிகப் பெரிய சீர்திருத்தமாக இருக்கும் என தெரிவித்தார்.

12 உறுப்பினர்களை உள்ளடக்கிய அம்மன்றத்தின் தோற்றுநர் வாரியத்தில், ஊடக நிறுவனங்கள், ஊடக சங்கங்கள், ஊடவியலாளர்கள், சுயேட்சை ஊடகவியாளர்கள் மற்றும் ஊடகம் சாராதவர் என 4 பிரிவுகள் உள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் நால்வர் நியமனம் செய்யப்பட்டுள்ள வேளை, அதில் ஒருவராக, மலேசிய தமிழ்ப்பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னனும் இடம்பெற்றுள்ளார்.

மிகப் பெரிய சீர்த்திருத்தமாக பார்க்கப்படும் அம்மன்றம், ஊடக நண்பர்கள் இதுவரை வெளிப்படுத்த விரும்பிய பல விஷயங்களைப் பேசவும், அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்தவும் வாய்ப்பை அமைத்துக் கொடுக்கும்.

இன்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற 2025 தேசிய ஊடகவியலாளர்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஃபஹ்மி அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

 

spot_img

latest articles

explore more