கோலாலம்பூர், ஜூன் 15-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தல் வரையில் நிலைத்திருக்கும்.
அதனை ஒரு போதும் வீழ்த்த முடியாது என துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹமட் ஸாஹிட் ஹமீடி திட்டவட்டமாக கூறினார்.
நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்க, டத்தோ ஸ்ரீ அன்வாரை பிரதமர் பொறுப்பிலிருந்து அகற்ற வலியுறுத்தி, வருகின்ற ஜூலை 26ஆம் தேதி பாஸ் கட்சி பேரணி நடத்தவுள்ளது.
அப்பேரணியைச் சுட்டிக்காட்டி அக்கூற்றை முன்வைத்த டத்தோ ஸ்ரீ ஸாஹிட், பாஸ் கட்சியின் அப்பேரணி, ஒரு போதும் அதன் இலக்கை அடையாது என்றார்.
மடானி அரசாங்கத்தைக் கவிழ்க்க, எதிர்க்கட்சியினர் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். ஆனால், தங்களின் அரசாங்கத்தை பேரணி வாயிலாக எல்லாம் வீழ்த்த முடியாது.
மடானி அரசாங்கத்தை மேலும் நிலைத்திருக்கச் செய்ய, ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், அவற்றுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவது அவசியமாவதாக, டத்தோ ஸ்ரீ ஸாஹிட் வலியுறுத்தினார்.


