Homeசமூகம்அறிவியல் விழா; சிலாங்கூரில் பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.

அறிவியல் விழா; சிலாங்கூரில் பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.

ஷா அலாம், ஜூன் 15-

அஸ்தி அமைப்பின் ஏற்பாட்டில் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா நேற்று ஷா அலாம் எமரல்ட் தமிழ்ப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

அதில், பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வெற்றியாளராக வாகை சூடியது.

சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும், சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்த வேளை, சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி அடுத்தத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

இப்போட்டியில், மாநிலம் முழுவதிலுமிருந்து மொத்தம் 70 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்ற வேளை, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் சார்ந்த தங்களின் படைப்புகளை முன்வைத்தனர்.

குறிப்பாக, தங்களின் படைப்புகள் என்ன? அதனால், ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? என்பது குறித்தும் முக்கிய பிரமுகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மாணவர்கள் விளக்கினர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிலாங்கூர் மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கார், அஸ்தியின் அறிவியல் விழா திட்ட இயக்குநர் சுபாஷ், மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத் தலைவர் பாண்டியன் முதலானோர் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்ப்பள்ளிகள் தேசிய அளவிலான அறிவியல் விழாவில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

latest articles

explore more