Homeஅரசியல்பணம் உள்ளவர்கள் அவகேடோ பழத்தை உண்ண வேண்டுமானால், இன்னும் கொஞ்சம் செலவிடட்டும்! -அன்வார்

பணம் உள்ளவர்கள் அவகேடோ பழத்தை உண்ண வேண்டுமானால், இன்னும் கொஞ்சம் செலவிடட்டும்! -அன்வார்

லூமுட், ஜூன் 15-

விற்பனை மற்றும் சேவை வரி – எஸ்.எஸ்.டி. விரிவாக்கத்தில், இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துப் பேசினார்.

அந்நடவடிக்கை, பணக்காரர்களுக்கு மட்டுமே வரி விதிக்கும் நோக்கம் கொண்டது என்றாரவர்.

இறக்குமதி பழங்களுக்கு விதிக்கப்படும் 5 சதவீத வரி, அவகேடோ போன்ற விலையுயர்ந்த பழங்களை உண்ணும் மக்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.

சம்பந்தப்பட்ட வரி விதிப்பு குறித்த செய்தி புரியாமல் சிலர் கோபமடைகின்றனர். அத்தரப்பினர் முதலில் நன்றாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து உடனே தாக்கி பேசக்கூடாது.

இப்போது அதிக விலையுடையவை இறக்குமதி பழங்கள். அவகேடோ பழத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டேன், தலைமைச் செயலாளர் உண்கிறார். விலையுயர்ந்த அப்பழம், இறக்குமதி செய்யப்படுகிறது.

வசதியுடையவர்கள் அப்பழத்தை உண்கிறார்கள். அவகேடோ பழத்தை உண்ண விரும்பினால், உண்ணுங்கள். ஆனால் கொஞ்சம் கூடுதலாக அதற்கு செலவிடுங்கள்.

அப்பழத்திற்கு தாங்கள் வரி விதிப்பதாக, இன்று பேராக், லூமுட்டில் நடைபெற்ற மதானி ராக்யாட் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.

spot_img

latest articles

explore more