Homeசமூகம்சமூகம்குழந்தைகளின் பாதுகாப்பில் அதி கவனம் செலுத்துவீர்!சுஹாகாமிற்கு பிரதமர் வேண்டுகோள் 

குழந்தைகளின் பாதுகாப்பில் அதி கவனம் செலுத்துவீர்!சுஹாகாமிற்கு பிரதமர் வேண்டுகோள் 

புத்ராஜெயா, ஜூன் 17-

சுஹாகாம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் குழந்தைகள் உட்பட பாதுகாப்பற்ற மக்களின் உரிமைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமையை நிலைநாட்டும் அதே வேளையில், நம்பிக்கைக்குரிய அமைப்பாக சுஹாகாம் தொடர்ந்து விளங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.

தமது அலுவலகத்தில் சுஹாகாம் தலைவர்  டத்தோஸ்ரீ முகமது ஹிஷாமுடின் யூனுஸைச் சந்தித்துப்  பேசியபோது இவ்விவகாரம் பற்றி விவாதித்ததாக  அன்வார் சொன்னார்.

இச்சந்திப்பில் நாட்டில் அனைத்து சமூகங்களையும்  பாதிக்கும் முக்கிய மனித உரிமை விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும்  பிரதமர் விவரித்தார்.

குறிப்பாக, எதிர்பாராத  ஆபத்துகளுக்கு ஆளாக நேரிடும் குழந்தைகளின் மனித உரிமைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தும்படி இந்த ஆணையத்தைத் தாம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

spot_img

latest articles

explore more