Homeகுற்றவியல்நிறுவனங்களின் வங்கிக் கணக்கை பொதுவில் பகிர்வு:வெ. 90 மில்லியன் இழப்பீடு வழங்க பப்ளிக் பேங்கிற்கு ஆணை! 

நிறுவனங்களின் வங்கிக் கணக்கை பொதுவில் பகிர்வு:வெ. 90 மில்லியன் இழப்பீடு வழங்க பப்ளிக் பேங்கிற்கு ஆணை! 

கோலாலம்பூர், ஜூன் 18-தேசிய கால்நடைகள் தீவன கழகமான நேஷனல் ஃபீட்லோட் கார்பரேஷன் மற்றும் அதன் மூன்று நிறுவனங்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பொதுவில் பகிர்ந்ததற்காக 90 மில்லியன் வெள்ளி இழப்பீடு வழங்கும்படி பப்ளிக் பேங்கிற்கு இங்குள்ள கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேஷனல் ஃபீட்லோட் கார்பரேஷன் மற்றும் அதன் 3 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களைப் பாதுகாக்கத் தவறிய காரணத்திற்காக அந்நிறுவனங்களுக்கு பப்ளிக் பேங்க் 90 மில்லியன் வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஹிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு தீர்ப்பளித்தது .

அவ்வகையில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா 30 மில்லியன் வெள்ளியைச் செலுத்தும்படி பப்ளிக் பேங்க் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தவிர, இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்குவதற்கு முன்பு மொத்த தொகைக்கு 2 விழுக்காடு வட்டியை பப்ளிக் பேங்க் இன்று முதல் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஹஸ்னா ஹாஹிம் ஆணையிட்டார்.

 

 

spot_img

latest articles

explore more