Homeஅரசியல்வளர்ந்த நாடுகளுக்கு நிகராக நாட்டின் மருத்துவ நிபுணத்துவம்! துவான் இப்ராஹிம் புகழாரம்

வளர்ந்த நாடுகளுக்கு நிகராக நாட்டின் மருத்துவ நிபுணத்துவம்! துவான் இப்ராஹிம் புகழாரம்

 

கோலாலம்பூர், ஜூன் 18-

மருத்துவமனை ஒன்றில் பாஸ் கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கு வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவைச் சிகிச்சை, கட்சி ஆதரவாளர்களையும் அந்த தலைவரை நேசிப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேவேளையில், வளர்ந்த நாடுகளுக்கு நிகராக, மலேசியாவில் மருத்துவ துறையின் நிபுணத்துவம் உள்ளதையும் அது புலப்படுத்துவதாக, பாஸ் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.

“இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி, நமது நாட்டில் உயர்ந்த மருத்துவத் திறமையும், வளர்ந்த நாடுகளுக்கு இணையான வசதிகளும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

சிகிச்சைக்கு முன் சில மணி நேரங்களுக்கு முன்பு, மருத்துவக் குழுவினர் கட்சியின் மூத்த தலைவர்களிடன் தான் ஸ்ரீ ஹாடி அவாங்கிற்கு வழங்கப்படவுள்ள சிகிச்சைக் குறித்து விளக்கினர்.
அதன் வழி, அந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் உயர்ந்த அர்ப்பணிப்பை நான் நேரடியாகக் கண்டேன்.

உறுதியான மன உறுதி, தீவிரமான முயற்சி, மருத்துவத் திறமை மற்றும் அனைவரின் பிரார்த்தனைகளால், இறுதியாக எங்கள் தலைவர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடிந்ததாக, டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம், அவரது பேஸ்புக் பதிவில் கூறினார்.

தான் ஸ்ரீ ஹாடி அவாங்கிற்கு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக முடித்ததாக, அவரது அரசியல் செயலாளர், ஷாஹிர் சுலைமான் கூறியிருந்தார்.

spot_img

latest articles

explore more