Homeசமூகம்இந்தோ. எரிமலை வெடிப்பு: ஏர் ஆசியா விமான சேவைகள் ரத்து!

இந்தோ. எரிமலை வெடிப்பு: ஏர் ஆசியா விமான சேவைகள் ரத்து!

பாலி, ஜூன் 18-

இந்தோனேசியா, கிழக்கு நூசா தெங்காரா பகுதியில் லெவோதோபி  எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏர் ஆசியா விமானச் சேவைகள்  அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவின் பாலி,  லோம்போக்,  லாபுவான் பாஜோ ஆகிய பகுதிகளுக்கான  விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக  ஏர் ஆசியா நிறுவனம் அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது.

இப்பகுதிகளில்  விமானப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனம்  கூறியது.ஏர் ஆசியா மலேசியா (ஏகே), ஏர் ஆசியா இந்தோனேசியா (கியூஇசட்) மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் மலேசியா (டி7) ஆகியவற்றால் இயக்கப்படும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதோடு மறு அட்டவணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அறியப்படுகிறது. 

அப்பகுதிகளிலிருந்து பயணிக்கும் ஏர் ஆசியா பயணிகள்  ஏர் ஆசியா மூவ் செயலியில் தங்களின் அண்மைய விமானச் சேவை குறித்து  மின்னஞ்சல் மூலம் அறிவிப்புகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

spot_img

latest articles

explore more