Homeகுற்றவியல்வெ 26 மில்லியன் நன்கொடையில் முறைகேடு:ஐவர் கைது

வெ 26 மில்லியன் நன்கொடையில் முறைகேடு:ஐவர் கைது

புத்ரா ஜெயா, ஜூன் 18-

நன்கொடையாக வசூலிக்கப்பட்ட 26 மில்லியன் ரிங்கிட் நிதியை சட்டவிரோதமாக சொந்த லாபத்திற்குப் பயன்படுத்திய ஓர் அரசு சாரா இயக்கத்தின் தலைவர், செயலாளர் உட்பட ஐவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

சிரியாவில் ஒரு கிணற்றை அமைக்க வசூலிக்கப்பட்ட பணத்தை அந்த நபர்கள் சொந்த வங்கிக் கணக்கிச் சேர்ப்பித்து முறைகேடு செய்ததாகவும் விசாரணைக்குப் பின்னர், அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகள், ரொக்கம் 9 லட்சம் ரிங்கிட், வெளிநாட்டு நாணயங்கள் 650,000 ரிங்கிட், மலாக்கா, பினாங்கு, சிலாங்கூரில் வாங்கப்பட்ட 1.4 மில்லியன் பெறுமானமுள்ள துண்டு நிலங்கள், மலாக்காவில் வாங்கப்பட்ட 4 வீடுகள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 5 மில்லியன் ரிங்கிட் இருப்பு கொண்ட அவர்களின் 8 சொந்த வங்கிக் கணக்குகளும் நிறுவனத்தின் 5 மில்லியன் ரிங்கிட் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருப்பதாக எம்ஏசிசி அறிவித்துள்ளது.

 

spot_img

latest articles

explore more