பெக்கான், ஜூன் 18-செவ்வாய்க்கிழமை இரவு குவாந்தானிலிருந்து சிகாமாட்டை நோக்கிப் பயணித்த காரொன்று ஜாலான் குவாந்தான் சிகாமாட் சாலையில் லேப்பார், கம்போங் பத்து லாப்பான் எனுமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லோரியோடு மோதி விபத்துக்குள்ளானது.
பெக்கான் பெல்டா சினி எனும் இடத்தைச் சேர்ந்த காரை ஓட்டிய 44 வயது ஜமால் அஸிஸுல் சமாட்டும் அவரது மனைவி 41 வயதான லிஸாவாத்தி அப்துல்லாவும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
அவர்களுடன் பயணித்த 6 முதல் 17 வயதுடைய மூன்று பிள்ளைகள் கடுமையாகக் காயமடைந்து குவாந்தான் தெங்கு அம்புவான் அப்ஸான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தின் காரணம் விசாரிக்கப்படுவதாகத் தெரிய வருகிறது.


