Homeஅரசியல்அன்வார் மீதான ஆதரவு 55 விழுக்காடாக உயர்வு

அன்வார் மீதான ஆதரவு 55 விழுக்காடாக உயர்வு

கோலாலம்பூர், ஜூன் 23-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக, மெர்டேகா சென்டரின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டு ஜூனில் 43 விழுக்காடாக இருந்த ஆதரவு விகிதம், இவ்வாண்டு 55 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

1,208 பதிவுப்பெற்ற வாக்காளர்களை உட்படுத்திய இந்தக் கருத்துக்கணிப்பில், நிலையற்ற அரசியல் சூழல் குறைந்து, நாடு நிலைத்தன்மையுடன் இருப்பதாக மக்கள் உணர்கின்றனர்.

நிறுவன சீர்திருத்தங்கள், 2025 நாடாளுமன்ற சேவைச் சட்டம் மற்றும் பொருளாதார வளர்ச்சி 4.4 விழுக்காடாக பதிவு ஆகியவை மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளன.

வாழ்க்கைச் செலவு குறித்த கவலைகள் குறைந்து, குறைந்தபட்ச ஊதியம் RM1,700 ஆக உயர்த்தப்பட்டு, எரிபொருள் மானியம் தொடர்கிறது. மார்ச் 2025 இல் பணவீக்கம் 1.4 விழுக்காடாக குறைந்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றது, 2025 இல் ஆசியான் தலைவராக தலைமையேற்றது முதலானவற்றின் வழி, டத்தோ ஸ்ரீ அன்வார், மலேசியாவின் உலகளாவிய பிம்பத்தை உயர்த்தியுள்ளதாக, அத்தரப்பினர் கருதுவதாக, மெர்டேக்கா செண்டர் கூறியது.

spot_img

latest articles

explore more