Homeகுற்றவியல்இஸ்ரேல், ஈரான் இடையே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம்! -டிரம்ப்

இஸ்ரேல், ஈரான் இடையே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம்! -டிரம்ப்

வாஷிங்டன், ஜூன் 24-

இஸ்ரேல், ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமூக ஊடகத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம், நிரந்தரமாக இருக்கக்கூடிய முக்கியமான புரட்சிகர முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளும் தற்போது நடைபெற்று வரும் தங்களின் இறுதி இராணுவ நடவடிக்கைகளை முடித்தவுடன், அடுத்த ஆறு மணி நேரத்தில் முழுமையான போர் நிறுத்தத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

“இஸ்ரேல் மற்றும் ஈரான், ஆறு மணி நேரத்தில் (இறுதி பணிகள் முடிந்தவுடன்) 12 மணி நேர முழு ஆயுத நிறுத்தத்திற்கு உடன்பாடு எட்டியுள்ளன. அதன்பின், இந்தப் போர் முற்றாக முடிவுக்கு வரும்,” என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக மேற்கு ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்திய மோதலை முடிவுக்கு கொண்டுவர இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கும் என டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும், இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து இஸ்ரேலின் தெல் அவிவ் அல்லது ஈரானின் தெஹ்ரானிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

ஆயினும், வாஷிங்டனின் இந்த அறிவிப்பு, பிராந்தியத்தில் பெரும் போர் அச்சுறுத்தல் நிலவும் நிலையில், உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள மிக முக்கிய இராஜதந்திர முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

spot_img

latest articles

explore more