Homeசமூகம்2025 கண்ணதாசன் விழா - தமிழ் இலக்கியப் பெருவிழா இம்மாதம் 29ஆம் தேதி நடைபெற உள்ளது!

2025 கண்ணதாசன் விழா – தமிழ் இலக்கியப் பெருவிழா இம்மாதம் 29ஆம் தேதி நடைபெற உள்ளது!

கோலாலம்பூர், ஜூன் 24-

கவிஞர் கண்ணதாசனின் இலக்கியப் பொக்கிஷங்களைக் கொண்டாடும் வகையில், மலேசிய கண்ணதாசன் அறக்கட்டளையின் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் M. சரவணன் தலைமையில், 2025 கண்ணதாசன் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

இவ்விழா இம்மாதம் 29ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 1 மணி அளவில், கோலாலம்பூரிலுள்ள செட்டியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


தமிழ் ஆர்வலர்களுக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் உண்மையான தமிழமுதம் பருகும் அரிய வாய்ப்பாக இந்த விழா அமையும். கவிஞர் கண்ணதாசனின் காலமற்ற படைப்புகளைப் போற்றி, இலக்கிய ரசனையில் மூழ்கிடும் மறக்க முடியாத அனுபவத்தை இவ்விழா வழங்கும்.

விழாவின் சிறப்பு அம்சமாக, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பேச்சாளர்களான தாமல் கோ. சரவணன், இந்திரா விஜயலட்சுமி ஆகியோரின் உரைகள் இடம்பெற உள்ளன.

தமிழ் இலக்கியத்தின் பெருமையை உணர்ந்து, கண்ணதாசனின் கவிதைகளில் திளைக்க இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

நுழைவு கட்டணம் முற்றிலும் இலவசம்!

spot_img

latest articles

explore more