Homeசமூகம்செமாந்தான் தோட்டத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்குவீர் !    நீதிமன்றம் உத்தரவு

செமாந்தான் தோட்டத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்குவீர் !    நீதிமன்றம் உத்தரவு

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர் செமாந்தான் எஸ்டேட்டின் 106 ஹெக்டர் நிலத்தை வலுக் கட்டாயமாகக் கையகப்படுத்திய அரசின் நடவடிக்கையானது சட்டவிரோதம் என்றும் அதற்கு ஈடான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமென்று மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அந்த நிலத்தை டூத்தா வளாகம் என பெயரிட்டு அதில் அரசு பல அரசாங்க அலுவலகக் கட்டடங்களைக் கட்டி இருப்பதால், இப்போது அந்த நிலத்தை செமாந்தான் எஸ்டேட் நிர்வாகத்திற்கு திருப்பிக் கொடுப்பது முடியாது என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் அந்த இழப்பீட்டுத் தொகையை நிர்ணயித்து, எஸ்டேட் நிர்வாகத்திற்கு வழங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. தற்போது அந்த நிலத்தின் மதிப்பீடு 1200 கோடி ரிங்கிட் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(பொன் முனியாண்டி)

 

spot_img

latest articles

explore more