கோலாலம்பூர், ஜூன் 29-
வரும் செவ்வாய்க்கிழமை 66 வயதை எட்டும் நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட்டின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டுமென்று முன்னாள் சட்டத் துறை துணையமைச்சர் ராம் கர்ப்பால் சிங் அறைகூவல் விடுத்துள்ளார்.
மடானி அரசின் உருமாற்றத் திட்டங்களைத் தொடர கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தெங்கு மைமுனின் பதவியை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வெண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தெங்கு மைமுன் கட்டாய ஓய்வு வயதை செவ்வாய்க் கிழமையும் அபாங் இஸ்கண்டார் புதன் கிழமையும் நீதிபதி நளினி ஆகஸ்டு 22லும் அடையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
பேரரசரின் ஒப்புதலோடு நீதிபதிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்க சட்டம் வகை செய்கிறது.
-பொன் முனியாண்டி


