கோலாலம்பூர், ஜூன் 30-
திங்கள் சந்திப்புக் கூட்டம் என்பது ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு வாராந்திர நிகழ்ச்சியாகும்.
இந்த வாரத்தில் விவேகமாக முதலீடு செய்தல் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
ஒரு மேம்பாட்டாளரிடமிருந்து சொத்துடமை வாங்கும்போது இருக்கும் ஆபத்தைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் 2ஆம் நிலை சொத்துடமைகளில் முதலீடு செய்தல் குறித்து முதலீட்டுத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களைக் கொண்டுள்ள கோவிந்த் பாலா விளக்கம் அளிப்பார்.
இதில்:
• திட்டத்திற்கு அப்பாற்பட்டு வாங்குதல் என்றால் என்ன?
• 2ஆம் நிலை முதலீடு என்றால் என்ன?
• முதன்மை ஆபத்து துறைகள்
• திட்டத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள்
• 2ஆம் நிலை சொத்துடமைகளிலுள்ள வெளிப்படைத்தன்மை
• முதலீட்டுத் திட்டம் தவறாவது எப்படி?
• 2ஆம் நிலை நன்மைகள்
• ஆபத்து நிர்வாக வழிமுறைகள்
ஆகியவை உட்பட விவேகமாக முதலீடு செய்வது குறித்து இன்னும் விரிவான விளக்கமளிப்பைக் கோவிந்த் பாலா வழங்குவார்.


