Homeசமூகம்அனைத்துலக யோகா தினம்!  தமிழ்ப்பள்ளிகளில் யோகாசன கலையை அறிமுகப்படுத்த முயற்சி

அனைத்துலக யோகா தினம்!  தமிழ்ப்பள்ளிகளில் யோகாசன கலையை அறிமுகப்படுத்த முயற்சி

ஷா ஆலம், ஜூலை 7-

ஷா ஆலம் உலக சமாதான ஆலயத்தின்  ஏற்பாட்டில் அனைத்துலக யோகா தினம் இங்குள்ள எமரால்டு தமிழ்ப்பள்ளியில் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அனைத்துலக யோகா தினத்தையொட்டி கோப்பியோ அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரன் அர்ஜூனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 80 பேர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில்  ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் சிறப்பு வருகை  புரிந்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரவீந்திரன், ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் கோப்பியோ அமைப்பின் வாயிலாக யோகா தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை தாங்கள் நடத்தி வருவதாகச் சொன்னார்.

யோகாசனம் பற்றிய புரிதலை இளம் பிராயத்தினர் மத்தியில் ஏற்படுத்துவது மற்றும் அதனை ஒரு பயிற்சியாக கடைபிடிக்க அவர்களை ஊக்குவிப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்நிகழ்வுக்கு தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் விவரித்தார்.

“இந்த யோகாசனக் கலையை தமிழ்ப்பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதற்கு   நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்”.

இவற்றில் கடந்தாண்டு 200 பள்ளிகளில் யோகாசன பயிற்சியை அறிமுகப்படுத்தியதும் அடங்கும் என்றார்.

இவ்வாண்டு இவ்வெண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது. வரும் 2029ஆம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தை அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு யோகா கலையில் தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும்  அவர்   கூறினார்.

spot_img

latest articles

explore more