பலாக்கோங்:

பொருளாதார சிரமத்தை எதிர்நோக்கி வரும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவனின் சாரணர் இயக்க சீருடையின் தேவையை நிறைவேற்றினார் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய்.

காஜாங் வெஸ்ட் கன்றி தீமோர் தமிழ்ப்பள்ளி மாணவன் நா. டிரோஷன் பிள்ளையை நேரிடையாக சாரணர் இயக்க சீருடை விற்பனை கடைக்கு அழைத்துச் சென்று அவனுக்குப் பொருத்தமான சீருடையை வாங்கிக் கொடுத்தார் வேய்ன் ஓங்.

தனது மகனின் தேவையை உணர்ந்து உடனடியாக இச்சீருடையை வாங்கிக் கொடுத்த வேய்ன் ஓங்கிற்கு சிறுவனின் தாயார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.