Homeமலேசியாபக்காத்தான் ஹாராப்பான் அளிப்பது வெற்று வாக்குறுதிகளே! -சாலே சைட் கெருவாக்

பக்காத்தான் ஹாராப்பான் அளிப்பது வெற்று வாக்குறுதிகளே! -சாலே சைட் கெருவாக்

கோலாலம்பூர், மார்ச் 9-

பக்காத்தான் ஹாராப்பான் (நம்பிக்கைக் கூட்டணி) வெற்று வாக்குறுதிகளையே அறிவித்திருக்கின்றதே தவிர அதனை செயல்படுத்துவது கிடையாது என தொழில்நுட்பம் மற்றும் பல்லூடகத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் தெரிவித்தார்.

எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு பக்காத்தான் ஹாராப்பான் நேற்று தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவது எளிதான விஷயமல்ல என்றும் அவர்கள் வகுத்து வைத்த திட்டத்தின் மூலம் மலேசியாவை மேம்படுத்துவது சுலபமல்ல என்றும் அவர் இன்று தனது அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

நாட்டை மேம்படுத்துவதற்கு முதலில் ஆதாரப்பூர்வமான திட்டங்கள் வகுக்க வேண்டும். வாழ்க்கை செலவீனங்களை குறைத்து வருமானம் அதிகரிக்ககூடிய வகையில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வருமானம் அதிகரிக்கச் செய்வதற்கு பணம் எவ்வாறு கிடைக்கும் என்று அவர்கள் விளக்கமளிக்கவில்லை என சைட் கெருவாக் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில், எண்ணெய்கான உரிம தொகை 20 விழுக்காடு வழங்கப்போவதாக கூறியுள்ளனர். ஆனால், மேம்பாட்டிற்கான மானியமும் வரவு செலவுத் திட்டங்களும் குறைக்கப்படுமா அல்லது அதற்கான சுமைகள் கூடுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமே தவிர தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக மட்டும் இருக்கக்கூடாது என அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more