Homeஅரசியல்நாட்டின் 9வது பிரதமராகப் பதவி உறுதிமொழி அளித்தார் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் !

நாட்டின் 9வது பிரதமராகப் பதவி உறுதிமொழி அளித்தார் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் !

கோலாலம்பூர் | 21/8/2021 :-

அம்னோவின் துணைத் தலைவரும் Bera பேரா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாட்டின் 9வது பிரதமராகப் பதவி உறுதி மொழி அளித்தார்.

அரண்மனையில் மாமன்னரின் முன்னிலையில் பிற்பகல் 2.29 மணி அளவில் அவர் பதவி உறுதிமொழி அளித்தார்.

அந்த நிகழ்ச்சியை பிரதமர் துறை அலுவலகம் தனது முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தது.

Ismail Sabri angkat sumpah jawatan Perdana Menteri kesembilan

ஓர் அரசியல் கட்சியின் தலைவர் பதவி வகிக்காமல் பிரதமராகி இருக்கும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இவர் தான்.

61 வயதுடைய டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி முந்தைய அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more