Homeஅரசியல்நிதியமைச்சராக மாட் ஹசான் ! – அம்னோ இளைஞரணி

நிதியமைச்சராக மாட் ஹசான் ! – அம்னோ இளைஞரணி

கோலாலம்பூர் | 23/8/2021 :-

புதிய பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக அம்னோவின் துணைத் தலைவர் முகம்மட் ஹசான் நியமிக்கப்பட வேண்டும் என அம்னோ இளைஞரணித் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி தமது பரிந்துரையை முன் வைத்துள்ளார்.

மக்களின் எண்ணவோட்டத்தை நன்கு அறிந்த ஒருவரே அந்தப் பதவியை வகிக்க வேண்டும்.

வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்திவைப்பது. ஊழியர் சேமநிதியை மீட்பது, இன்னும் பல மக்கள் உதவித் திட்டங்கள் போன்ற அத்துறையைச் சார்ந்த சில முடிவுகளை எடுக்க வசதியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.facebook.com/drasyrafwajdidusuki/posts/4810667378963271

“இந்தப் பரிந்துரைக்குச் சம்மதமா ?” எனத் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே சமயம், முகம்மட் ஹசான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதால் அமைச்சராகப் பதவி வகிக்க முடியாது.

இருப்பினும், மேலவை உறுப்பினராக செனட்டராக நியமிக்கப்பட்டு அவருக்கு அமைச்சர் பதவியை வழங்க முடியும்.

spot_img

latest articles

explore more