Homeமலேசியாஆஸ்ட்ரோ வானொலி ரிம116.4 மில்லியன் மதிப்புள்ள ஒலிபரப்பு நேரத்தை உள்ளூர் பிராண்டுகளுக்கு உதவுவதற்காக ஒலிபரப்பியது

ஆஸ்ட்ரோ வானொலி ரிம116.4 மில்லியன் மதிப்புள்ள ஒலிபரப்பு நேரத்தை உள்ளூர் பிராண்டுகளுக்கு உதவுவதற்காக ஒலிபரப்பியது

கோலாலம்பூர் | 23/8/2021 :-

கோலாலம்பூர், 2021 ஆகஸ்டு 23 – ஆஸ்ட்ரோ வானொலி டிஜியுடன் (Digi) கூட்டாண்மையில் இணைந்துத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் வணிகங்களுக்கு உதவிக்கரம் நீட்ட ‘KamiCare MBiz’-ஐ அறிமுகப்படுத்தியது. இப்பிரச்சாரத்தின் கீழ், தகுதிவாய்ந்த வணிகங்களுக்கு அவர்களின் பிராண்டுகளுக்கான ஈடுபாடு (engagement) மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் வண்ணம் இலவச ஒலிபரப்பு நேரம் வழங்கப்படுகிறது. ஏழு மாதக் காலக்கட்டத்தில், ரிம116.4 மில்லியன் மதிப்புள்ள ஒலிபரப்பு நேரத்தை ஒலிபரப்பி இந்தப் பிரச்சாரம் சுமார் 3030-க்கும் மேற்பட்ட உள்ளூர் வணிகங்களுக்கு வெற்றிகரமாக உதவியுள்ளது.

ஆஸ்ட்ரோ வானொலியின் தலைமை நிர்வாக அதிகாரி, கென்னி ஓங் கூறுகையில், “ ‘KamiCare MBiz’ மூலம் சமூகம் மற்றும் உள்ளூர் பிராண்டுகளுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மைக்ரோ மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் எங்களின் தூரநோக்கு இலக்கைப் பகிர்ந்துக் கொள்ளும் டிஜி போன்றக் கூட்டாளர்களுடன் இணைந்துப் பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

‘KamiCare MBiz’ அறிமுகப்படுத்தியதிலிருந்து நாங்கள் பெரும் வரவேற்ப்பைப் பெற்றோம். எங்களது அனைத்துத் தளங்களிலும் ஏறக்குறைய 7,700 சமர்ப்பிப்புகளை நாங்கள் பெற்றோம். அதிகமான உள்ளூர் வணிகங்கள் எங்களின் 17 மில்லியன் வானொலி நேயர்களையும் எங்களின் சமூக ஊடகங்களில் 23 மில்லியன் பின்தொடர்பவர்களையும் சென்றடையும் வாய்ப்பைப் பெற இந்தப் பிரச்சாரத்தை நாங்கள் நீட்டிக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ”

டிசம்பர் 2020-இல் ‘KamiCare MBiz’ தொடங்கியதிலிருந்து, வீட்டுச் சமையல்காரர்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் (cafés), பூ வியாபாரிகள், நிகழ்வு மேலாண்மை குழுக்கள் (event management teams), தையல்காரர்கள், கார் பழுது மற்றும் வீடு சுத்தம் செய்யும் பணிகளைச் செய்பவர்கள், தகவல் தொழில்நுட்பத் தீர்வுக்காணும் நிறுவனங்கள், செல்லப்பிராணி உணவுக் கடைகள், விளையாட்டு உடை மற்றும் உபகரணக் கடைகள், கைவினைப்பொருட்கள் கடைகள், குழந்தைப் பொருட்கள் கடைகள், குளிர்பானக் கடைகள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு உள்ளூர் வணிகங்களிலிருந்து ஆஸ்ட்ரோ வானொலி பிராண்டுகள் சமர்ப்பிப்புகளைப் பெற்றுள்ளன.

பெறப்பட்டச் சமர்ப்பிப்புகளிலிருந்துத், தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகங்கள் ஒரு வார காலப்பகுதியில் 30 வினாடி வானொலி அறிவிப்புகள் மூலம் குறைந்தது 25 முறை வானொலியில் குறிப்பிடப்பட்டன. மேலும் இந்த வணிகங்களின் விபரங்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்ட்ரோ வானொலி பிராண்டின் சமூக ஊடகங்களில் கூடுதல் அடைவுநிலை (reach) மற்றும் ஈடுபாட்டிற்காகப் (engagement) பகிரப்பட்டன. உள்ளூர் உணவு விற்பனையாளர்களான “24 Seven FNB” மற்றும் “Little Boss” உட்படத் தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகங்கள் முகநூல் நேரலை ஸ்ட்ரீம்களின் போதுக் கூடுதலாகக் குறிப்பிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவ்வணிகங்கள் கூடுதல் விற்பனைகளைப் பெற்றன.

வணிகங்கள் மற்றும் நேயர்கள் தங்களின் கோரிக்கைகளை அனைத்து ஆஸ்ட்ரோ வானொலி பிராண்ட்கள் மற்றும் SYOK செயலியில் தொடர்ந்துச் சமர்ப்பிக்கலாம்: HITZ, MIX, LITE, ERA, SINAR, GEGAR, ZAYAN, MY, MELODY, GOXUAN, மற்றும் ராகா .

spot_img

latest articles

explore more