Homeசமூகம்சமூகம்ஆசியான் உச்சநிலை மாநாடு: ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

ஆசியான் உச்சநிலை மாநாடு: ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

கோலாலம்பூர், மே 21-ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்படும் என ரெபிட் கேஎல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மே 23 தொடங்கி 27ஆம் தேதி வரை காலை மணி 6.30 முதல்  10 வரையிலும், மாலை மணி 4.30 முதல் இரவு மணி 8 வரையிலும் அதன் சேவை ஒரு மணிநேரத்திற்கு நீட்டிக்கப்படும் என பெரசரானா அறிக்கை ஒன்றின் வழி விவரித்தது.

அனைத்துலக பேராளர்கள் உட்பட பயணிகள் அனைவரின் சீரான போக்குவரத்தை கருத்தில் கொண்டு முதன்மையான நிலையங்களில் கூடுதலாக 400 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

கூடுதலாக இவ்வார இறுதி நாட்களான மே 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் ரயில் பயணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மோனோரயிலும் ஒவ்வோர் எட்டு நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும்.

இதனிடையே, பல சாலைகள் அமலாக்கத் தரப்பினரால் படிப்படியாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, பல பேருந்து வழிகள் மற்றும் ஆன்- டிமான் சேவைகள் தாமதங்களைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

latest articles

explore more