Homeசமூகம்சமூகம்தமிழர் கலை, கலாச்சாரத்திற்கு புத்துயிரூட்டும் தமிழ் வண்ண விழா! திரண்டு வாரீர்! 

தமிழர் கலை, கலாச்சாரத்திற்கு புத்துயிரூட்டும் தமிழ் வண்ண விழா! திரண்டு வாரீர்! 

ஷா ஆலாம், மே 27-இந்நாட்டில் தமிழ் மற்றும் தமிழர்களின் கலை கலாச்சாரத்தை மேலோங்கச் செய்யும் பொருட்டு மிகப் பெரிய அளவிலான தமிழ் வண்ண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை ஷா ஆலாம், எம்.பி.எஸ்.ஏ மண்டபத்தில் நடைபெறும்.

இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள் , பானங் கள் , ஆடை, அலங்காரப் பொருட்கள் , கைவினை பொருட்கள் மற்றும் கலைப் பொருட்கள் சார்ந்த 50க்கும் மேற்பட்ட சந்தைகள் அமைக்கப்படும் .

இந்த மாபெரும் விழா ஷா ஆலாம் மாநகராட்சி மன்றம், மக்கள் பிரதிநிதி மன்றம் (எம்பிபி) பிரிவு 13, எஸ்.ஆர்.எஃப்ஏ கலை& கலாச்சார அமைப்பு, ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை & கலை பயிலகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறவிருக்கிறது.

இதில் ரங்கோலி கோலம், தோரணம் பின்னுதல், உறுமி மேள கச்சேரி, நடனங்கள், பேச்சு போட்டி, பரத நாட்டிய போட்டி போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மக்கள் பிரதிநிதி மன்றம் (எம்பிபி) பிரிவு 13 பொறுப்பாளர் நதிந்தரன்ராஜ் பாஸ்கரன் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்ட தீச்சட்டி, கோலாட்டம்& தீப்பந்தம் போன்றவையும் இடம் பெற்றிருக்கும் என்றார்.

தமிழர்களின் பாரம்பரிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள்,பண்டையக் கால பொருட் களின் கண்காட் சி, சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட தமிழ் மரபுகளை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

2,000 திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்ச்சிக்கு தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு மற்றும் சில பிரமுகர்களும் சிறப்பு வருகை புரிவர்.

இவ்விழாவில் திரளாகக் கலந்து கொள்ளும்படி சுற்று வட்டார மக்களை நதிந்தரன் ராஜ் கேட்டுக் கொண்டார்.

 

 

spot_img

latest articles

explore more