Homeவர்த்தகம்ஊழலை வெறுக்கும் மக்கள் பேரணி 2.0! ஜூன் 28ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

ஊழலை வெறுக்கும் மக்கள் பேரணி 2.0! ஜூன் 28ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

கோலாலம்பூர், ஜூன் 13

ஊழலுக்கு எதிரான கழக சீர்திருத்தங்களை அரசாங்கம் விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி, ஊழலை வெறுக்கும் மக்கள் பேரணி இரண்டாம் முறையாக நடத்தப்படவுள்ளது.

இம்மாதம் 28ஆம் தேதி, மாலை மணி 2.30 மணிக்கு கோலாலம்பூரிலுள்ள சோகோ பேரங்கடி வளாகத்தின் முன்பு தொடங்கி, மெர்டேக்கா சதுக்கம் வரையில் மக்கள் பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 25ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் பேரணியில், மடானி அரசாங்கத்திற்கு மனு அளித்தும் அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு உறுதியான பதிலும் கிடைக்காததைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக அப்பேரணி ஏற்பாடு செய்யப்படுவதாக, அதன் ஏற்பாட்டுத் தரப்பு கூறியது.

இதுவரையில் தங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கம், உறுதியான பதிலை வழங்கவில்லை.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம், எதிர்க்கட்சியாக இருந்த போது, ஊழலுக்கு எதிரான கழகச் சீர்த்திருத்தங்களை முன்மொழிந்தது.

ஆனால், தற்போது மௌனம் காக்கவே அவரது அரசாங்கம் விரும்புவதாக, அதன் ஏற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டினர்.

முதல் பேரணியைவிட, இரண்டாவது பேரணியில் இன்னும் மிகப் பெரிய அளவிலான மக்கள் கலந்துகொள்வார்கள். கடந்த பேரணியில் இரண்டு வாரங்களில், 400 பேரை ஒருங்கிணைக்க முடிந்தது என்றால், இந்த முறை இன்னும் அதிகமானவர்களை தங்களால் ஒன்று திரட்ட முடியும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

spot_img

latest articles

explore more