Homeசமூகம்சமூகம்நல்லொழுக்கமும் கொள்கையும் உடையவர் பழனிவேல்! 

நல்லொழுக்கமும் கொள்கையும் உடையவர் பழனிவேல்! 

பட்டர்வொர்த், ஜூன் 18-

மறைந்த மஇகாவின் முன்னாள் தலைவர் ஜி. பழனிவேல் ஒரு நல்லொழுக்கமும் சிறந்த கொள்கையையும் கொண்டவர் என பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் மஇகா தலைவராகவும் ஓர் அமைச்சராகவும் இருந்தபோது தமக்கு உற்ற நண்பராகத் திகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பல சமயங்களில் தமது அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவர் உதவியிருப்பதை நன்றியோடு நினைவு கூர்வதாகவும் அவரின் மறைவானது இந்திய சமூகத்திற்குப் பேரிழப்பு என்றும் குறிப்பிட்ட அவர் பழனிவேலை இழந்து துயருறும் அவரின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

 

spot_img

latest articles

explore more