Homeகுற்றவியல்ஆலய நிதி முறைகேடு:  தலைவர், செயலாளர் கைது

ஆலய நிதி முறைகேடு:  தலைவர், செயலாளர் கைது

மலாக்காவில் உள்ள ஆலயம் ஒன்றின்  50,000 வெள்ளி நிதியை முறைகேடு செய்த அதன் தலைவரும் செயலாளரும் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

61 மற்றும் 75 வயதான இருவரையும் தடுப்புக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிபதி உத்தரவிட்டார்.

ஆலயத்தின் நிதியை செயலவையின் அனுமதியின்றி சொந்தக் காரியங்களுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்களிருவரும் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 

spot_img

latest articles

explore more