Homeசமூகம்சமூகம்நம்பிக்கைமிகு பாதுகாப்பு அமைப்பாகத் திகழ்வீர்! போலீஸ் படைக்கு பிரதமர் வேண்டுகோள் 

நம்பிக்கைமிகு பாதுகாப்பு அமைப்பாகத் திகழ்வீர்! போலீஸ் படைக்கு பிரதமர் வேண்டுகோள் 

புத்ராஜெயா, ஜூலை 1-

உயர்நெறிகள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பாதுகாப்பு அமைப்பாக தனது நிலையை அரச மலேசிய போலீஸ்படை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

அதே வேளையில், தனது அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் நலன் புறக்கணிக்கப்படாமலிருப்பதையும் அரச மலேசிய போலீஸ்படை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் பிரதமர்.

நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அகமது காலிட் இஸ்மாயிலுடனான சந்திப்பின் போது அன்வார் இந்த வேண்டுகோளை முன் வைத்தார்.

செயற்கை நுண்ணறிவு உள்பட போலீஸ் படையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இச்சந்திப்பின்போது அகமது காலிட்டுடன் தாம் விவாதித்ததாக தமது முகநூல் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்டார்.

 

 

spot_img

latest articles

explore more