Homeமலேசியாநல்லாட்சியைக் கவிழ்க்கவே பெரிக்காத்தான் நேஷனலின் பேரணி! 

நல்லாட்சியைக் கவிழ்க்கவே பெரிக்காத்தான் நேஷனலின் பேரணி! 

கோலாலம்பூர், ஜூலை 17-

தலைநகர், டத்தாரான் மெர்டேக்காவில் மடானி அரசாங்கத்தை எதிர்த்தும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்து, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தப் பேரணியானது ஆட்சியின் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக்   கூறுவதோடு ஜனநாயக முறையில் தேர்தலின் வழி ஆட்சியைப் பிடிக்க முடியாமல் ஜனநாயகத்திற்குப் புறம்பாக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டிருப்பதாக பிரதமரின் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கண்டார் மாட் ஆக்கின் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியின் மீது  ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொள்ளப்படும் அவர்களின் செயல் வெற்றி பெறாது.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் பெரிக்காத்தான் கூட்டணி ஜனநாயக ரீதியாகப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென ஷம்சுல் சவால் விடுத்தார்.

ஜூலை 6ஆம் தேதி அக்கூட்டணி ஷா ஆலமில் நடத்திய பேரணியில் 300 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், வரும் 26ஆம் தேதி நடத்தப்படும் பேரணியில் 3 லட்சம் பேர் கூடுவர் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more