Homeமலேசியாநாட்டின் மொத்த கடன். வெ. 1.3 டிரில்லியன்! 

நாட்டின் மொத்த கடன். வெ. 1.3 டிரில்லியன்! 

கோலாலம்பூர், ஜூலை 30-

இவ்வாண்டு ஜூன் வரையிலும் நாட்டின் மொத்த கடன் தொகை 1.25 டிரில்லியனிலிருந்து 1.3 டிரில்லியன் ரிங்கிட்டாக( ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும்) உயர்ந்துள்ளதாகத் துணை நிதியமைச்சர் லிம் ஹுய் இங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தக் கடன் அதிகரிப்பானது மேம்பா ட்டுத் திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், சமூகத் திட்டங்கள் அதிகரித்த காரணத்தினால் உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாட்டின் கடன் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காட்டில் வைத்திருக்கும் வகையில் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க, உதவித் தொகையைக் குறைக்க, அரசு நிர்வாகத்தில் தனியார் நிறுவனங்களோடு கூட்டமைப்பு வகையில் திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவை நடைமுறைப் படுத்தப்படும் என்றும் லிம் தெரிவித்தார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more