கோலாலம்பூர்:
ஜோதிடம், ஜாதகம், திருமணப் பொருத்தம் மற்றும் நேரடி ஜோதிட ஆலோசனை உள்ளிட்ட சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும் மலேசியாவின் முதல் செயலி ‘Astrria’ அறிமுகம் செய்யப்பட்டது.
Restoran Gajaa-வில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் இந்த Astrria செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
பயனர்கள் தங்களுக்கான ஜாதகம் மற்றும் திருமணப் பொருத்தத்தைப் பார்ப்பதுடன், ஜோதிடர்களிடம் நேரடியாக ஆலோசனை பெறவும் Astrria மூலம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், செயலியில் உருவாக்கப்படும் பயனர் சுயவிவரங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படாமல், முதலில் சரிபார்க்கப்பட்ட பின்னரே அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி சுயவிவரங்கள் மற்றும் மோசடிகளைத் தவிர்த்து, பயனர்களுக்கு நம்பகமான தளத்தை வழங்குவதே நோக்கம் என Astrria தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பயனர்கள் தங்களது கேள்விகளைக் கேட்டு ஆலோசனை பெறுவதுடன், தனியுரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர்களிடம் ஆலோசனை பெறுவதற்கான கட்டணம், தேர்வு செய்யப்படும் சேவையைப் பொறுத்து மாறுபடும். குறுஞ்செய்தி மூலம் ஆலோசனை பெறுதல், தொலைபேசி அழைப்பு மற்றும் நேரடி காணொளி ஆலோசனை ஆகியவற்றுக்குத் தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
ஜோதிடம் மற்றும் திருமணத் துணை தேடல் தொடர்பான சேவைகளை ஒரே தளத்தில் இணைக்கும் வகையில் Astrria உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


