ஜெம்போல், ஜூலை 31-
நெகிரி செம்பிலான் ஜெம்போலில் 6 வயது எம்.திஷாண்ட் என்ற சிறுவன் கொலை செய்யப்பட்டு, அவனது உடல் நான்கு நாள்களுக்குப் பின்னர் புதைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
உடற்கூறு பரிசோதனையில் சிறுவன் கழுந்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அது தொடர்பாக சிறுவனின் 36 வயதான தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறான்.
இந்நிலையில், மகனின் கொலையைக் கேள்விப்பட்ட தாயார், துயரம் தாளாமல், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த மாதுவுக்குத் தேவைப்படும் மனநல சிகிச்சையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.


