Homeசமூகம்6.3 மில்லியன் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு தலா வெ. 10,000 செலுத்துவீர்! 

6.3 மில்லியன் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு தலா வெ. 10,000 செலுத்துவீர்! 

கோலாலம்பூர், ஆக.5-

55 வயதுக்கும் குறைவான ஊழியர் சேமநிதி சந்தாதாரர்கள் 48 விழுக்காட்டினருக்கு 10,000 வெள்ளிக்கும் குறைவான சேமிப்பு நிதி இருப்பதால், அவர்களின் ஓய்வை சிரமமின்றி சமாளிக்க ஒவ்வொருவரின் இபி எஃப் கணக்கிலும் 10,000 ரிங்கிட்டை அரசு சேர்ப்பிக்க வேண்டுமென கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ பரிந்துரை செய்துள்ளார்.

ஊழியர்களின் சராசரியான சம்பளம் குறைவாக இருப்பதன் காரணமாகவே பெரும்பாலான தொழிலாளர்கள் ஊழியர் சேம நிதியிலிருந்து பணத்தை மீட்டுக் கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் அமலில் இருப்பது போன்றே அவ்வப்போது, தொழிலாளர் அனைவருக்கும் ஊழியர் சேம நிதிக் கணக்கில், குறிப்பிட்ட தொகையைக் கூடுதலாக செலுத்தும் நடைமுறையை நமது நாட்டிலும் அமல்படுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

-பொன் முனியாண்டி

 

 

spot_img

latest articles

explore more