Homeகலை உலகம்தமிழ் சினிமாவில் திருப்புமுனை ஏற்படுத்திய இயக்குநர் பாரதிராஜாவுக்கு மலேசியாவில் புகழஞ்சலி

தமிழ் சினிமாவில் திருப்புமுனை ஏற்படுத்திய இயக்குநர் பாரதிராஜாவுக்கு மலேசியாவில் புகழஞ்சலி

கோலாலம்பூர்:

காலம் சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கலைப்பயணத்தையும் தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் போற்றும் வகையில், “மண்வாசனை தந்த பாரதிராஜாவுக்கு முதல் மரியாதை புகழஞ்சலி” நிகழ்ச்சி அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ம.இ.கா. துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி தொடர்பான சிறப்பு செய்தியாளர் சந்திப்பு இன்று ம.இ.கா. தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் மற்றும் டத்தோ டி. மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், பாரதிராஜாவின் வருகை தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன், அவரது பல திரைப்படங்கள் சமூகக் கருத்துகளை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார். காலம் சென்ற பாரதிராஜாவுக்கு மலேசிய மண்ணில் புகழஞ்சலி செலுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கண்ணதாசன் அறவாரியம், யாசி உள்ளிட்ட மேலும் பல சமூக இயக்கங்கள் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துவதாகவும் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்தார்.

அக்டோபர் 11ஆம் தேதி பத்துமலை Shenga Convention Hall-ல் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 1,000 பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், நுழைவு இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

latest articles

explore more