கோலாலம்பூர், ஆக.15-
எஸ்ஆர்சி நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட்டை அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதமான முறையில் களவாடிய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தற்போது காஜாங் சிறையில் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் .
எஸ்ஆர்சி மற்றும் அதன் துணை நிறுவனமான காண்டிங்கான் மெந்தாரி நிறுவனமும் அந்தப் பணம் தங்களுக்குச் சொந்தமானது என்றும் அதனை நன்கு அறிந்திருந்தும் மோசடி செய்து தமது சொந்த வங்கிக் கணக்கில் வரவு வைத்து தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியதோடு பொதுமக்கள் பணத்தையும் கொள்ளையடித்திருப்பதாக அந்நிறுவனங்கள் நஜிப் மீது குற்றம் சாட்டி, அவர் மீது நீதிமன்றத்தில் சிவில் வழக்கைத் தொடுத்துள்ளன.
நஜிப்பிடமிருந்து மேற்கண்ட 42 மில்லியன் ரிங்கிட்டை பொதுமக்களின் நலனை முன்னிட்டு திரும்பப் பெறவே தற்போது தாங்கள் நஜிப் ரசாக் மீது சிவில் வழக்கைத் தாக்கல் செய்திருப்பதாக வழக்கறிஞர் குவான் வில் சென் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
-பொன் முனியாண்டி


