Homeஅரசியல்ம.இ.கா இஸ்காண்டார் புத்ரி தொகுதி வடமாநில சுற்றுலா சிறப்பாக நடைபெற்றது

ம.இ.கா இஸ்காண்டார் புத்ரி தொகுதி வடமாநில சுற்றுலா சிறப்பாக நடைபெற்றது

கெடா:
ஜொகூர் இஸ்கண்டார் புத்ரி ம.இ.கா தொகுதியின் ஏற்பாட்டில் கிளைத் தலைவர்களுக்கான வடமாநிலச் சுற்றுலா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. தொகுதி தலைவர் திரு. சங்கரபாண்டியன் தலைமையில் மொத்தம் 43 பேர் இச்சுற்றுலாவில் கலந்தனர்.

சுற்றுலா குழுவினர் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டனர். இப்பயணத்திற்கு ம.இ.கா தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆதரவளித்ததோடு காலை உணவுக்கான ஏற்பாட்டையும் செய்தார்.

பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ தினகரன் சுற்றுலா பயணிகளை வரவேற்று மகிழ்ச்சியைத் தெரிவித்தார். பல்கலைக்கழக பணியாளர்கள் குழுவினரைப் பல்வேறு வளாகப் பகுதிகளுக்கு அழைத்து சென்று விரிவான விளக்கங்களையும் வழங்கினர்.

அறிக்கையின் படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்கிய இப்பல்கலைகழகம் மருத்துவக் கல்விக்கான அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும், சுற்றுலா குழுவினர் துன் சாமிவேலு அவர்களின் சிலையைப் பார்வையிட்டு பெருமையும் பிரமிப்பும் அடைந்தனர்.

சுற்றுலா குழுவினர், துன் சாமிவேலு இந்திய சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்பு வரலாற்றில் நிலைத்திருப்பதாகவும், ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் அதற்குச் சான்றாக விளங்குவதாகவும் ஒருமித்தமாகத் தெரிவித்தனர்.

spot_img

latest articles

explore more