Homeமலேசியாபுலாவ் காயாவில் பாலம் இடிந்து விழுந்தது; சிலர் கடலில் விழுந்தனர்!

புலாவ் காயாவில் பாலம் இடிந்து விழுந்தது; சிலர் கடலில் விழுந்தனர்!

பூலாவ் காயா:

சபா, புலாவ் காயா, காம்புங் செலாமாட் கிராமத்தில் ஹரி ராயா பண்டிகையின் முதல் நாளில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது.

அங்கு வந்திருந்தவர்களில் சிலர் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்தனர். புத்தாடை அணிந்து பெருநாளைக் கொண்டாட வந்தவர்களுக்கு இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்த போதிலும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தஞ்சோங் அரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பழுதடைந்த பாலங்களை உடனடியாகச் சீரமைக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

spot_img

latest articles

explore more