Homeமலேசியாபினாங்கில் பொதுமக்கள் - போலீஸ் மோதல்: 8 பேர் கைது

பினாங்கில் பொதுமக்கள் – போலீஸ் மோதல்: 8 பேர் கைது

ஜோர்ஜ் டவுன்:

பினாங்கு, ஜாலான் சுங்கை பினாங்கு பகுதியில் உள்ள ஓர் உணவகத்திற்கு அருகே போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு போலீசார் காயமடைந்தனர்.

சந்தேக நபர் ஒருவரை போலீசார் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றபோது, நிலைதடுமாறி உணவகத்தின் மீது மோதியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 20 முதல் 40 வயதுடைய 8 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காயமடைந்த போலீசார் சிகிச்சை பெற்றுத் திரும்பினர்.

இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

spot_img

latest articles

explore more