பீடோர்:
பேராக், பீடோரில் நவீன சுடுகாட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் கலந்து கொண்டார். 1.3 ஏக்கரில் ரிம 3 மில்லியன் செலவில் கட்டப்படும் இத்திட்டம், முஸ்லிம் அல்லாத மக்களின் நீண்டநாள் தேவைக்கு தீர்வாகும்.
முதல் கட்டத்தில் 2 எரிப்பு உலைகளுடன் தொடங்கும் இது, 5 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு நிதியிலேயே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


