Homeமலேசியாநம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் பிரதமர் பதவி 2 தவணைகள் மட்டுமே! லிம் குவான் எங்

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் பிரதமர் பதவி 2 தவணைகள் மட்டுமே! லிம் குவான் எங்

ஜோர்ஜ்டவுன், மார்ச் 7-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர், முதலமைச்சர், மந்திரி புசார் ஆகிய பதவிகளை வகிப்பதற்கான தவணைக்காலம் 2 தவணைகளாக கட்டுப்படுத்த அக்கூட்டணி இலக்கு கொண்டிருப்பதாக ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

இந்த விவகாரம் நேற்று நடைபெற்ற அக்கூட்டணியின் பொதுத்தேர்தல் வாக்குறுதி தொடர்பான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு கொள்கையையும் நாங்கள் அமல்படுத்தும் போது நாங்கள் கட்சிகளின் சம்மதத்தை மட்டும் பெறவில்லை. மாறாக, நம்பிக்கைக் கூட்டணியிலுள்ள இதர கட்சிகளின் சம்மதத்தையும் பெறுகிறோம். இதுவரையில், இந்த பரிந்துரையை சில தரப்பினர் நிராகரித்து வருகின்றனர்.

ஆயினும், பெரும்பான்மையானவர்கள் அப்பதவிகளுக்கான தவணைக்காலத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக தாமான் செரி செத்தியா அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற சீன பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றிய போது லிம் குவான் எங் சொன்னார்.

வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் பிரதமர் பதவியை வகிப்பதற்கான தவணைக்காலத்தை கட்டுப்படுத்தும் அக்கூட்டணியின் திட்டத்தை அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மட் உறுதிபடுத்தினார்.

கடந்த 1981ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையில் நாட்டின் பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர், அதிகார துஷ்பிரயோகத்தைத் தவிர்க்கவும் சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றில் அதிகார பிரிவு இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இது திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more