லண்டன், மார்ச் 7 –
9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சாம்பியன்ஸ் லீக் எனப்படும் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்புல் அரையிறுதி சுற்றுக்கு தேர்வுப் பெற்றுள்ளது.
செவ்வாய்கிழமை நடந்த இரண்டாம் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் லிவர்புல், போர்ச்சுகலின் எப்.சி போர்ட்டோவுடன் கோல் ஏதுமின்றி சமநிலைக் கண்டது.எனினும் முதல் ஆட்டத்தில் 5 – 0 என்ற கோல்களில் வெற்றி பெற்றிருந்த லிவர்புல் 5 – 0 என்ற ஒட்டு மொத்த கோல் எண்ணிக்கையில் காலிறுதி சுற்றுக்கு தேர்வாகியது.சனிக்கிழமை நடைபெறவுள்ள பிரீமியர் லீக் போட்டியில் லிவர்புல், தனது பரம வைரியான மென்செஸ்டர் யுனைடெட்டை சந்திக்கவுள்ளது.
அந்த ஆட்டத்தை முன்னிட்டு லிவர்புல் நிர்வாகி ஜூர்கன் குலோப், தாக்குதல் ஆட்டக்காரர் முஹமட் சாலா, தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜில் வான் டாய்க்கிற்கு ஓய்வு வழங்கியிருந்தார்.எனினும் குலோப் களத்தில் இறக்கிய அணி ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தது. குறிப்பாக முதல் ஆட்டத்தில் ஹாட்ரீக் கோல்களைப் போட்டு சாடியோ மானே, போர்ட்டோ அணியின் தற்காப்பு அரணுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தார்.
இறுதி வரையில் இரண்டு அணிகளும் கோல் எதனையும் போடாமல் ஆட்டத்தை சமநிலையில் முடித்தன. ஆக கடைசியாக 2009 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு தேர்வான லிவர்புல் மீண்டும் காலிறுதியில் கால் பதித்திருப்பது அதன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



