Homeவிளையாட்டுஆவணங்களை தாமதமாக பதிவு செய்த அணிகளுக்கு அபராதம் !

ஆவணங்களை தாமதமாக பதிவு செய்த அணிகளுக்கு அபராதம் !

கோலாலம்பூர், மார்ச்.7 –

மலேசிய சூப்பர், பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஆவணங்களை தாமதமாக பதிவு செய்த அணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மலேசிய கால்பந்து கூட்டு ஒத்துழைப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அணிகளின் புள்ளிகள் குறைக்கப்படாது என மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் கூறிய வேளையில் தற்போது அந்த அணிகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.

இதில் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு 15 லட்சம் ரிங்கிட்டும், பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ஐந்து லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய சூப்பர் லீக் போட்டியில் கிளந்தான், கோலாலம்பூர்,சிலாங்கூர், பி.கே.என்.எஸ் அணிகள் தங்களுடைய ஆவணங்களை முறையாக பதிவு செய்யாத வேளையில் பிரீமியர் லீக் போட்டியில் சரவா, பினாங்கு, குவந்தான் எப்.ஏ, அரச மலேசிய போலீஸ் படை, மீபா, யூ.கே.என் எப்.சி அணிகளுக்கு ஐந்து லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும்14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அணிகள் செய்யும் மேல் முறையீட்டைப் பொறுத்து தண்டனையும் அபராதமும் குறைக்கப்படும் என மலேசிய கால்பந்து கூட்டு ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி கேவின் ராமலிங்கம் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more