கோலாலம்பூர், மார்ச் 7-
கடந்த வாரம் முழுவதும் ரோன் 95 பெட்ரோல் விலை 2.20 காசுக்கு விற்கப்பட்ட நிலையில், வருகின்ற வாரத்திற்கு 1 காசு அதிகரித்து 2.21 காசுக்கு விற்கப்படும். அதேபோல் கடந்த வாரம் 2.47 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல் இந்த வாரமும் அதே விலையில் விற்கப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் 2.18 காசுக்கு விற்கப்பட்ட டீசல் விலை இந்த வாரம் 1 காசு குறைந்து 2.17 காசுக்கு விற்கப்படும். இந்தப் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வருகின்ற 14ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.
பெட்ரோல் 1 காசு உயர்ந்தது; டீசல் 1 காசு குறைந்தது!


