Homeமலேசியாபிரதமருக்கான பதவிக்காலம்: இதற்கு முந்தைய தவணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது! லிம் குவான் எங்

பிரதமருக்கான பதவிக்காலம்: இதற்கு முந்தைய தவணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது! லிம் குவான் எங்

ஜோர்ஜ்டவுன், மார்ச் 7-
பிரதமர், முதலமைச்சர், மந்திரி புசார் ஆகிய பதவிகளுக்கான தவணைக்கால நிர்ணயிப்பு பரிந்துரையில் இதற்கு முந்தைய தவணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என நம்பிக்கைக் கூட்டணியின் துணைத் தலைவர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

காரணம், நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் இரண்டு தவணைகளுக்கும் மேலாக பிரதமர் பதவியை வகித்து விட்டதால் அவரால் இனிமேலும் அப்பொறுப்பை வகிக்க முடியாது என அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் துன் மகாதீர். ஆனால், பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெறும் போது அவருக்கும் துன் மகாதீர் வழிவிடுவார் என லிம் சொன்னார். வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்குறுதியில் இரண்டு தவணைகள் அடிப்படையிலான பதவிக்கால பரிந்துரை சேர்க்கப்படும் என நேற்று கூறியிருந்தார்.

அதிபர் பதவிக்கான இது போன்ற பதவிக்கால தவணையை சீனா நீக்குவதற்கு முடிவெடுத்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் வரவேற்றுள்ளார். இரண்டு பலம் பொருந்திய நாடுகள் ஒரே கருத்திணக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்த பதவிக்கால தவணையை அமல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக நாங்கள் கருதுகின்றோம். நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்களுடனான பல்வேறு சந்திப்பு கூட்டங்களில் இது குறித்து பேசி நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இது அடுத்த தவணையில் அமல்படுத்தப்படும் என லிம் குவான் எங் கூறினார்.

spot_img

latest articles

explore more