Homeமலேசியாநம்பிக்கைக் கூட்டணியின் பிடிபிடிஎன் கடனை ஒத்தி வைக்கும் பரிந்துரை சாத்தியமில்லாதது! பிடிபிடிஎன் தலைவர்

நம்பிக்கைக் கூட்டணியின் பிடிபிடிஎன் கடனை ஒத்தி வைக்கும் பரிந்துரை சாத்தியமில்லாதது! பிடிபிடிஎன் தலைவர்

கோலாலம்பூர், மார்ச் 8-

மாதம் 4 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாக சம்பளத்தைப் பெறும் பிடிபிடிஎன் கடனுதவியைப் பெற்றவர்களின் கடனுதவியை ஒத்தி வைக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் பரிந்துரைக் குறித்து தேசிய உயர்க்கல்வி நிதி அமைப்பு (பிடிபிடிஎன்) கேள்வியெழுப்பியுள்ளது.

இது குறித்து அதன் தலைவர் டத்தோ சம்சுல் அனுவார் நசாரா கூறுகையில், அந்த பரிந்துரையை அவ்வமைப்பு ஆய்வு செய்துவிட்டதாகவும் அதனை அமல்படுத்துவது மிக கடினம் என்றும் தெரிவித்தார். இது அந்த கடனுதவியைத் திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிடும். இதனைத் தொடர்ந்து, புதிய மாணவர்களுக்கு கடனுதவியை வழங்குவதற்கு நாம் நிதி நிறுவனங்களை நாட வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.

பிடிபிடிஎன் கடனுதவியைப் பெற்றவர்கள் கருப்பு பட்டியலிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த பரிந்துரை முன்வைக்கப்படுவதாக நம்பிக்கைக் கூட்டணி தனது பொதுத்தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் கருத்துரைக்கையில் லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்சுல் மேற்கண்டவாறு சொன்னார்.

நம்பிக்கைக் கூட்டணியின் இந்த பரிந்துரையை விட பிடிபிடிஎன்னின் ஏற்புடைய வகையில் கடனுதவியைத் திருப்பி செலுத்தும் முறை சிறப்பாக உள்ளது. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகும் மாணவர்களுக்கு 6 முதல் 12 மாதங்களுக்கு அவகாசங்கள் வழங்கப்படுகின்றது. 13ஆவது மாதத்தில்தான் அவர்கள் கடனுதவியைத் திருப்பி செலுத்த தொடங்குகின்றனர். மேலும், கடனுதவியை செலுத்த முடியாதவர்களுக்கு 24 மாதங்கள் கால அவகாசம் நீட்டித்தும் வழங்கப்படுகின்றன. பிடிபிடிஎன்னின் கொள்கை ஏற்புடையது என்பதோடு அந்த அமைப்பு நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது.

என்னைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக் கூட்டணியின் இந்த பரிந்துரை ஒரு அரசியல் நாடகமாகும். உண்மையில் இதை அவர்களால் அமல்படுத்த முடியாது என்பது கவலையளிக்கின்றது. முன்பு பிடிபிடிஎன் கடனுதவியை ரத்து செய்வதற்கு அவர்கள் பரிந்துரை செய்தனர். பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்களுக்கு உதவ அவர்கள் எங்கிருந்து பணத்தைப் பெறுவார்கள்? இளம் தலைமுறையினரின் வாக்குகளை கவர்வதற்காக எதிர்கட்சியினர் பொறுப்பில்லாமல் இத்தகைய பரிந்துரைகளை முன்வைப்பதாக டத்தோ சம்சுல் அனுவார் நசாரா குற்றம் சாட்டினார்.

spot_img

latest articles

explore more