Homeமலேசியா100 நாளில் மக்களின் சுமையைக் குறைக்கும் 10 திட்டங்கள்! நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் வாக்குறுதியில் அறிவிப்பு!

100 நாளில் மக்களின் சுமையைக் குறைக்கும் 10 திட்டங்கள்! நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் வாக்குறுதியில் அறிவிப்பு!

ஷா ஆலம், மார்ச் 9-

14ஆவது பொதுத்தேர்தலை முன்னிட்டு நேற்று இரவு பொதுத்தேர்தலுக்கான வாக்குறுதியை வெளியிட்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி தான் ஆட்சியமைத்தால் 100 நாளில் மக்களின் சுமையைக் குறைக்கக் கூடிய 10 திட்டங்கள் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

முன்னாள் பிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் ஷா ஆலமிலுள்ள ஐடியால் மாநாட்டு மையத்தில் அறிமுகப்படுத்திய நம்பிக்கை நூலில் 5 முக்கிய கூறுகள் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பெர்சாத்து, ஜசெக,பிகேஆர், அமானா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம், கருத்திணக்கம், கலாச்சார கல்வி, சுதந்திரம், உண்மை, சமூக நீதி, பொருளாதாரம், மரியாதை, நாகரீகம், ஒற்றுமை முதலானவற்றின் வழி மேம்பாடு, அமைதி, சுபிட்சம், ஜனநாயகம் ஆகியவற்றை வடிவமைக்கூடிய உருமாற்றத்திற்கு வித்திட ஒன்றிணைந்து செயல்படுவது நம்பிக்கை கூட்டணியின் இலக்காக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 100 நாளில் அக்கூட்டணி 1எம்டிபி மற்றும் 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்களை விசாரிக்கவும் தீர்வு காணவும் ஆணையம் மற்றும் செயற்குழு அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. பொருள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அகற்றுதல், மக்கள் நல திட்டங்கள் வாயிலாக அவர்களது சுமையைக் குறைத்தல், பெட்ரோலுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்குவதை அறிமுகப்படுத்துதல், நாடு முழுவதிலும் சரிசமமான குறைந்தபட்ச சம்பள முறை
முதலானவையும் அதில் வாக்குறுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் பிடிபிடிஎன் கடன் அதாவது மச்தம் 4 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாக வருமானத்தைப் பெறுபவர்கள், குடியேற்றவாசிகளின் கடன் ஆகியவற்றை ஒத்தி வைத்தல், இல்லத்தரசிகள் மற்றும் பி40 தரப்பினருக்கு இ.பி.எப் பாதுகாப்பு, பெல்டா குடியேற்றவாசிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் தேவையில்லாத கடன்களை ரத்து செய்தல், பி40 தரப்பினர்கள் தனியார் கிளினிக்குகளில் சிகிச்சைப் பெறுவதற்கு 500 வெள்ளியிலான பெடூலி சீஹாட் எனப்படும் சுகாதார பாதுகாப்பு திட்டம் முதலானவை நம்பிக்கைக் கூட்டணியின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையைப் பூர்த்தி செய்யக்கூடிய நாட்டை அமைத்தல் எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அந்நூலில் அந்நிய நாடுகளிடம் வழங்கப்பட்டிருக்கும் மெகா திட்டங்கள் குறித்த ஆய்வு உட்பட 5 ஆண்டுகளில் அமல்படுத்தக்கூடிய 60 வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி அறிவித்துள்ளது.

spot_img

latest articles

explore more