Homeமலேசியாஇன்வோக் ஆய்வு: 5 மாநிலங்கள் நம்பிக்கை கூட்டணி வசமாகுமா?

இன்வோக் ஆய்வு: 5 மாநிலங்கள் நம்பிக்கை கூட்டணி வசமாகுமா?

கோலாலம்பூர், மார்ச் 10-
மலேசிய இன்வோக் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் கருத்துகணிப்பின்படி வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் 5 மாநிலங்கள் நம்பிக்கைக் கூட்டணியின் வசமாகும் என தெரிவித்துள்ளது. அதேவேளையில், பிகேஆருக்கு நெருக்கமான அந்த அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வில் பாஸ் கட்சி தனது கோட்டையான கிளந்தான் உள்பட அனைத்து மாநிலங்களிலுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் தோல்வி காண நேரிடும் என தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இன்வோக் அமைப்பின் தோற்றுநர் ரபிசி ரம்லி கூறுகையில், நாடு தழுவிய நிலையில் பல்வேறு கோணங்களில் தேர்தலில் போட்டிகள் ஏற்பட்டால் தீபகற்ப மலேசியாவில் 89 நாடாளுமன்ற தொகுதிகளை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றும் என்றும் தேசிய முன்னணி 76 தொகுதிகளில் வெல்லும் என்றும் தெரிவித்தார்.

இதில், சபா, சரவாக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என கூறிய அவர், திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களுடன் 28 ஆண்டுகள் முயற்சியாக பாஸ் கட்சியிடமிருந்து கிளந்தானை தேசிய முன்னணி கைப்பற்றும் என அவர் கூறினார். இதனிடையே, நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கைக் கூட்டணி ஆகியவற்றின் வெற்றிகள் சட்டமன்றங்களில் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை சார்ந்துள்ளது. நம்பிக்கை கூட்டணி சிலாங்கூர், பினாங்கு ஆகிய மாநிலங்களுடன் கெடா, ஜொகூர், பேராக் ஆகிய மாநிலங்களைக் கைப்பற்றும்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில் இன்வோக் மேற்கொண்ட ஆய்வில் நம்பிக்கைக் கூட்டணி மீதான மலாய்க்காரர்களின் ஆதரவு 14.1 விழுக்காடாகவும் சீனர்களின் ஆதரவு 82 விழுக்காடாகவும் இந்தியர்கள் ஆதரவு 40 விழுக்காடாகவும் உள்ளதாக ரபிசி குறிப்பிட்டார். கடந்த டிசம்பரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தேசிய முன்னணிக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு 6 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் மலேசிய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள தேர்தல் மறுசீரமைப்பு தொகுதிகள் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் பிகேஆரின் உதவித் தலைவருமான அவர் சொன்னார். அதனால், நஜீப் நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையைத் தாக்கல் செய்தால் நாம் தயாராக இருக்க வேண்டுமென ரபிசி குறிப்பிட்டார்.

சபா, சரவாக்கில் நம்பிக்கைக் கூட்டணி மற்றும் வாரிசான் முதலான கட்சிகள் 15 நாடாளுமன்ற தொகுதிகளைப் பெற்றுத்தருவதோடு எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக 100 முதல் 105 தொகுதிகளைப் பெற முடியும். இதன் அடிப்படையில் தேசிய முன்னணி 117 முதல் 122 தொகுதிகள் வரை வென்று புத்ராஜெயாவைக் கைப்பற்றும் என தெரிகின்றது.

மாநிலம் வாரியான கருத்துக்கணிப்பு!

பெர்லிஸ்-தேசிய முன்னணி வெற்றி
நாடாளுமன்றம்- தே.மு (3) ந.கூ (0) பாஸ் (0)
சட்டமன்றம்- தே.மு (13) ந.கூ (2) பாஸ் (0)

கெடா- நம்பிக்கைக் கூட்டணி வெற்றி
நாடாளுமன்றம்- தே.மு (5) ந.கூ (10) பாஸ் (0)
சட்டமன்றம்- தே.மு (14) ந.கூ (22) பாஸ் (0)

பினாங்கு- நம்பிக்கைக் கூட்டணி வெற்றி
நாடாளுமன்றம்- தே.மு (2) ந.கூ (11) பாஸ் (0)
சட்டமன்றம்- தே.மு (5) ந.கூ (35) பாஸ் (0)

பேராக்- நம்பிக்கைக் கூட்டணி வெற்றி
நாடாளுமன்றம்- தே.மு (14) ந.கூ (10) பாஸ் (0)
சட்டமன்றம்- தே.மு (27) ந.கூ (32) பாஸ் (0)

சிலாங்கூர்- நம்பிக்கைக் கூட்டணி வெற்றி
நாடாளுமன்றம்- தே.மு (2) ந.கூ (20) பாஸ் (0)
சட்டமன்றம்- தே.மு (6) ந.கூ (50) பாஸ் (0)

நெகிரி செம்பிலான்- சரிசமமான வாய்ப்பு
நாடாளுமன்றம்- தே.மு (5) ந.கூ (3) பாஸ் (0)
சட்டமன்றம்- தே.மு (18) ந.கூ (18) பாஸ் (0)

மலாக்கா- சரிசமமான வாய்ப்பு
நாடாளுமன்றம்- தே.மு (3) ந.கூ (3) பாஸ் (0)
சட்டமன்றம்- தே.மு (14) ந.கூ (14) பாஸ் (0)

ஜொகூர் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி
நாடாளுமன்றம் தே.மு (10) ந.கூ (16) பாஸ் (0)
சட்டமன்றம் தே.மு (27) ந.கூ (29) பாஸ் (0)

பகாங்- தேசிய முன்னணி வெற்றி
நாடாளுமன்றம்- தே.மு (9) ந.கூ (5) பாஸ் (0)
சட்டமன்றம்- தே.மு (27) ந.கூ (15) பாஸ் (0)

திரெங்கானு- தேசிய முன்னணி வெற்றி
நாடாளுமன்றம்- தே.மு (8) ந.கூ (0) பாஸ் (0)
சட்டமன்றம்- தே.மு (31) ந.கூ (1) பாஸ் (0)

கிளந்தான்- தேசிய முன்னணி வெற்றி
நாடாளுமன்றம்- தே.மு (14) ந.கூ (0) பாஸ் (0)
சட்டமன்றம்- தே.மு (44) ந.கூ (1) பாஸ் (0)

கூட்டரசு பிரதேசம்
நாடாளுமன்றம்- தே.மு (1) ந.கூ (11) பாஸ் (0)

spot_img

latest articles

explore more