Homeவிளையாட்டுமலேசிய கால்பந்து சங்கத்திடம் மிரட்டல் வேண்டாம் - துங்கு இஸ்மாயில்!

மலேசிய கால்பந்து சங்கத்திடம் மிரட்டல் வேண்டாம் – துங்கு இஸ்மாயில்!

கோலாலம்பூர், மார்ச் 10-

மலேசிய லீக் கால்பந்துப் போட்டிகளில் முறையான ஆவணங்களை சமர்பிக்காமல் , தாமதமாக பதிவு செய்த அணிகள் மலேசிய கால்பந்து சங்கத்துக்கு மிரட்டல் விடுக்க வேண்டாம் என அதன் தலைவர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் எச்சரித்துள்ளார். சம்பந்தப்பட்ட அந்த அணிகளுக்கு எதிராக மலேசிய கால்பந்து கூட்டு ஒத்துழைப்பு நிறுவனம் அபராதம் விதித்திருந்தது.

இதனால் பிரீமியர் லீக் போட்டியில் இருந்து விலகி கொள்கிறோம் என மலேசிய இந்திய கால்பந்து அணி மீபா எச்சரிக்கை விடுத்தது. இதுபோன்ற எச்சரிக்கைகளில் மலேசிய கால்பந்து சங்கம் பயந்து விடாது என துங்கு இஸ்மாயில் தெரிவித்தார். நாட்டின் கால்பந்து விளையாட்டின் தரத்தை உயர்த்த மலேசிய கால்பந்து சங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.எனினும் எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்ட அணிகளால், கால்பந்து விளையாட்டின் தரம் மேம்படுவதில் சுணக்கம் ஏற்படுவதாக அவர் சொன்னார்.

அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். அதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மலேசிய கால்பந்து கூட்டு ஒத்துழைப்பு நிறுவனம் அதனை முறையாக பரிசீலிக்கும். அதனை விடுத்து போட்டியில் இருந்து விலகுகிறோம் என சவால் விடுப்பது அழகல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more